செய்திகள் கலைகள்
``தனுஷ் இளம் வயதில் முதிர்ந்த படைப்பாற்றல் திறன் கொண்டிருக்கிறார்'' - `இட்லி கடை' குறித்து சீமான்
சென்னை:
'இட்லி கடை' படத்தைப் பார்த்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 'இட்லி கடை' குறித்து பகிர்ந்திருக்கிறார்.
டான் பிக்சர்ஸ், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ள படம் 'இட்லி கடை'.
இந்தப் படத்தில் தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தனுஷ் இயக்கத்தில் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் படத்தைப் பார்த்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 'இட்லி கடை' குறித்து பகிர்ந்திருக்கிறார்.
இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டிருக்கும் அவர், “தம்பி தனுஷ் எழுதி, இயக்கி, நடித்த 'இட்லி கடை' படத்தை பார்த்தேன்.
வாழ்வதற்குதான் பணம் தேவை. பணமே வாழ்க்கை இல்லை. தன் இட்லி கடை படத்தில், நிறைய செய்திகளை கவித்துவமாக, உணர்ச்சி குவியலாக சொல்லியிருக்கிறார் தம்பி தனுஷ்.
இளம் வயதில் முதிர்ந்த படைப்பாற்றல் திறன் கொண்டிருக்கிறார். இப்படத்தை பார்த்தபின், நாம் எல்லோரும் நம் வேர்தேடி பயணிப்போம்” என்று பாராட்டி பேசியிருக்கிறார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 3:40 pm
மாரி செல்வராஜ் தயாரிக்கும் புதிய படத்தில் அமீர்
May 21, 2026, 5:29 pm
மகா நடிகை நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்கிறார் ராதிகா
May 19, 2026, 9:36 pm
இசையமைப்பாளர் இளையராஜாவிடம் ‘கருப்பு’ படக்குழு வருத்தம் தெரிவித்தது
May 14, 2026, 5:07 pm
கருப்பு வெளியீடு ரத்தானது குறித்து ஆர்ஜே பாலாஜி கண்ணீர்
May 13, 2026, 5:17 pm
இயற்கையும் கலையும் கை கோர்க்கும் அதிசயம்: திறந்தவெளி கலை அரங்காக மாறும் லங்காவி
May 7, 2026, 6:14 pm
படப்பிடிப்பில் தீபிகா தீவிரம்: வீட்டில் குழந்தையைக் கவனிக்கும் ரன்வீர்
May 7, 2026, 11:49 am
ஆர். பி. சவுத்ரிக்கு திரைத்துறையினர் புகழஞ்சலி
May 5, 2026, 9:43 pm
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி காலமானார்
May 4, 2026, 4:05 pm
