நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளந்தான் கடத்தல் வழக்கில் பெண் உட்பட 8 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

கோத்தாபாரு:

கிளந்தான் கடத்தல் வழக்கில் பெண் உட்பட 8 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாசிர் பூத்தேயில் ஒரு ஆடவரை கடத்திய சந்தேகத்தின் பேரில்  ஒரு பெண் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதான அனைவரும் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 385, 342 மற்றும் 365, துப்பாக்கிகள் (கடுமையான தண்டனைகள்) சட்டம் 1971 இன் பிரிவு 8 இன் கீழ் மேலும் விசாரணைக்கு அனுமதிக்கக் கோரிய போலிசாரின் விண்ணப்பத்தை அனுமதித்த பின்னர், மாஜிஸ்திரேட் அமிருல் ஆசிரஃப் அப்துல் ரசித் காவலில் வைக்க உத்தரவைப் பிறப்பித்தார்.

முன்னதாக, ஆரஞ்சு நிற லாக்கப் சட்டைகளை அணிந்து முகத்தை மூடியபடி அனைத்து சந்தேக நபர்களும் இன்று காலை 8.30 மணிக்கு கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு வந்தனர்.

அக்டோபர் 2 ஆம் தேதி, 20 முதல் 46 வயதுடைய அனைத்து சந்தேக நபர்களும் கோத்தா பாரு, பச்சோக், பாசிர் புத்தே மற்றும் தும்பட் ஆகிய இடங்களில் ஆறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.

அதே நேரத்தில் கடத்தப்பட்டவர் வெற்றிகரமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset