நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ், சீன, தேசிய பள்ளி ஆசிரியர்களுக்கு இலக்கவியல், செயற்கை நுண்ணறிவு கல்வியாளர் பயிற்சி பட்டறை

கோலாலம்பூர்:

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், சீன, தேசிய பள்ளி ஆசிரியர்களுக்கான இலக்கவியல், செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறை நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நாட்டில் புகழ்பெற்ற புளூ பிரதர்ஸ் சமூக நல இயக்கத்தின் ஆதரவோடு   நடைபெற்ற பயிற்சி பட்டறையில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அருட்சோதி அண்ணாமலை இந்த பயிற்சி பட்டறையை சிறப்பாக வழி நட்தினார்  என்று அவ்வியக்கத்தின்
இளைஞர் அணி தலைவர் டத்தோ எம். சங்கர் தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலை தேநீர் வழங்கப்பட்டது.

எங்கள் அரசு சாரா நிறுவனம் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு செயற்கை நுண்ணறிவு திட்டத்தை ஏற்பாடு செய்தது.  இந்த வாய்ப்பை ஆசிரியர்கள் நல்ல முறையில் பயன் படுத்தி கொண்டனர்.

வரும் அக்டோபர் 11 ஆம் தேதியும் இதே இடத்தில் இரண்டாவது பயிற்சி பட்டறை நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.

புளூ பிரதர்ஸ் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர்களுக்காக  நடத்தப்பட்ட முதல்  பயிற்சி பட்டறை பெரும் வரவேற்பைப் பெற்றது  என்று அதன் தலைவர்  சமாட் தெரிவித்தார்.

முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்ட இந்த செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு நல்ல பயனுள்ள பட்டையாக விளங்கியது என்று அவர் சொன்னார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset