நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி அரசாங்கத்தில்  இடைத்தரகர்கள் கலாச்சாரத்திற்கு இடமில்லை: டத்தோஸ்ரீ ரமணன் திட்டவட்டம்

சுங்கைபூலோ:

மடானி அரசாங்கத்தில்  இடைத்தரகர்கள் கலாச்சாரத்திற்கு ஒருபோதும் இடமில்லை.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை உறுதியாக கூறினார்.

1,000 ஆலயங்களுக்கு நிச்சயம் தலா 20,000 ரிங்கிட் வழங்கப்படும் என அண்மையில் நான் அறிவித்திருந்தேன்.

இந்திய சமுதாயத்திற்கான நலத் திட்டங்களை மேற்கொள்ளும் நோக்கில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டம் தற்போது பிரதமரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

ஆனால் இத்திட்டம் குறித்து பல்வேறு கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

என்னை பொருத்தவரையில் மடானி அரசாங்கத்தில் இடைத்தரகர்கள் கலாச்சாரத்திற்கு ஒருபோதும் இடமில்லை.

அதே வேளையில் சமுதாயத்தில் அந்நிதி நிச்சயம் ஆலயங்களை சென்றடையும்.

குறிப்பாக இந்நிதி விண்ணப்பத்திற்கான அகப்பக்கம் விரைவில் தொடங்கும்.

தேவையுள்ள ஆலயங்கள் அந்நிதிக்கு சம்பந்தப்பட்ட அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம்.

இது தான் இத்திட்டத்திற்கான வழிமுறையாகும்.  ஆக இது குறித்து தேவையில்லாத சர்ச்சைகள் தேவையில்லை.

மேலும் இதன் மூலம் நிதி கசிவுகளை தடுக்க முடியும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset