நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழில்துறை பயிற்சி மையத்தில் நடந்த தாக்குதல் ஒரு பழைய சம்பவம்: மனிதவளத் துறை

கோலாலம்பூர்:

தொழில்துறை பயிற்சி மையத்தில் நடந்த தாக்குதல் ஒரு பழைய சம்பவம் ஆகும்.

ஆள்பல இலாகா ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

கோலா திரெங்கானு தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் ஒரு விரிவுரையாளர் ஒரு மாணவரைத் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

இதுவொரு பழைய  சம்பவமாகும்.
இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி நடந்தது. அதே நாளில் உள் விசாரணை தொடங்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விசாரணை எந்த இடையூறும் இல்லாமல் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக அந்த நபர் பிப்ரவரி 6 ஆம் தேதி துறையின் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset