நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமானா இக்தியாரின் 16,600 உதவிப் பொருள் கூடைகள்; தீபாவளி நம்பிக்கையை மேலும் ஒளிரச் செய்கிறது: டத்தோஸ்ரீ ரமணன்

சுங்கைபூலோ:

அமானா இக்தியாரின் 16,600 உதவிப் பொருள் கூடைகள் வசதிக் குறைந்த மக்களின் தீபாவளி நம்பிக்கையை மேலும் ஒளிரச் செய்கிறது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

வரும் அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

இப்பெருநாளை முன்னிட்டு அமானா இக்தியார் மலேசியா  தீபாவளி வணக்கம் மடானி உதவிப் பொருள் கூடை திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் வாழும் பொருளாதார ரீதியாக பலவீனமான இந்தியக் குடும்பங்களுக்கு மொத்தம் 16,600 கூடைகளை வழங்கப்படவுள்ளது.

பொருளாதார சிரமத்தில் உள்ள குடும்பங்கள் தீபாவளி திருவிழாவை மகிழ்ச்சியாகக் கொண்டாட தேவையான அடிப்படைப் பொருட்களை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த கூடைகளில் அரிசி, சமைக்கும் எண்ணெய், முருக்கு மாவு, கறி தூள், பருப்பு, எள்ளெண்ணெய் உட்பட தீபாவளி தயாரிப்புகளுடன் தொடர்புடைய பல பொருட்கள் அடங்குகின்றன.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் எந்தவொரு இனத்தையும் புறக்கணிக்கவில்லை என்பதை இது காட்டுகிறது என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

முன்னதாக சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் 50 குடும்பங்களுக்கு இன்று இந்த  கூடை வழங்கப்பட்டது.

அதே வேளையில் நாடு முழுவதும் இந்த உதவிப் பொருட்களை கொண்டு சேர்க்கும்  8 லோரிகளை டத்தோஸ்ரீ ரமணன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்வில் அமானா இக்தியார் நிதி துணை மேலாண்மை இயக்குநர் நோர்ஷரிசல் மாஷாஹ்ரின்  கலந்து கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset