நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புக்கிட் காஜாங் டோல் சாவடியில் நடந்த கோர விபத்தில் சிக்கிய இரண்டாவது நபர் மரணம்

காஜாங்:

புக்கிட் காஜாங் டோல் சாவடியில் நடந்த கோர விபத்தில் சிக்கிய இரண்டாவது நபர் மரணமடைந்தார்.

கடந்த சனிக்கிழமை புக்கிட் காஜாங் டோல் சாவடியில் நான்கு வாகனங்கள் மோதிய கோர விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் சிக்கிய மற்றொருவர் இன்று உயிரிழந்தார்.

பாதிக்கப்பட்ட முகமட் ஹஃபிஸி அனுவார் (வயது 48), இன்று காலை சுமார் 11 மணியளவில் காஜாங் மருத்துவமனையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவரின் தம்பி முகமட் ஹஸ்வாத் அனுவார் சம்பவத்திற்குப் பிறகு தனது சகோதரர் காஜாங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்  சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறினார்.

சிகிச்சைக்குப் பிறகு எனது சகோதரர் இறந்துவிட்டார் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்.

அவர் இரண்டு குழந்தைகளை விட்டுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset