
செய்திகள் கலைகள்
இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த காந்தார இயக்குனர் ரிஷப் ஷெட்டி
பெங்களூரு:
கன்னட சினிமாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக ரிஷப் ஷெட்டி இன்று பார்க்கப்படுகிறார்.
யக்ஷகானம் எனும் பாரம்பரியக் கலையில் வேரூன்றி, உடுப்பி மண்ணின் வாசனையைத் திரையில் கொண்டு வந்து, ரசிகர்களை வியக்க வைத்த பெருமை இவரையே சாரும்.
நடிகர், இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர் ரிஷப் ஷெட்டி.
பி.காம் படிப்பை முடித்துவிட்டு, சினிமா வாய்ப்புக்காக தண்ணீர் கேன் விற்பது போன்ற சிறு வேலைகளைச் செய்து, கண்ட கனவை உறுதியுடன் பின்தொடர்ந்தவர்.
இவரது அர்ப்பணிப்பும், உள்ளூர் கலாசாரத்தின் மீதான தீவிர பற்றும்தான் 'காந்தாரா' படைப்பை உருவாக்கக் காரணமாக அமைந்தன.
இயக்குநராக ரிஷப் ஷெட்டியின் முதல் படமான 'ரிக்கி' (Ricky), 2016-ஆம் ஆண்டு வெளியீட்டின்போது பல இன்னல்களைச் சந்தித்தது.
தன் சொந்த ஊரான உடுப்பியில், தன் படத்திற்கு ஒரு மாலை நேரக் காட்சியை (7 PM Show) பெறுவதற்காகப் பலரிடம் போராடியதை அவர் பதிவு செய்திருந்தார்.
ஆனால் அதே ஆண்டில் அவர் இயக்கிய 'கிரிக் பார்ட்டி' (Kirik Party) திரைப்படம், கன்னடத் திரையுலகில் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்று, அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு அவர் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான 'சர்காரி ஹை. பிரா. ஷாலே, காசர்கோடு, கொடுகே: ராமண்ணா ராய்' படத்திற்காக தேசிய விருதில் சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான விருதை வென்று, தான் ஒரு திறமையான கலைஞர் என்பதை தேசம் முழுவதும் நிரூபித்தார்.
'காந்தாரா'வின் பயணம்!
ரிஷப் ஷெட்டியின் கலை வாழ்வின் உச்சமாக 2022-ஆம் ஆண்டு வெளியான 'காந்தாரா' திரைப்படம் அமைந்தது.
சிறு வயது முதல் அவர் பார்த்து வளர்ந்த பூத கோலா எனும் சடங்கு மற்றும் நிலத்தின் மீதான பழங்குடிகளின் பிணைப்பு ஆகியவையே 'காந்தாரா' படத்தில் ரிஷப் ஷெட்டி சொன்னார்.
இந்தப் படத்தில் 'சிவா' என்ற கதாபாத்திரத்திற்காக அவர் மேற்கொண்ட கடுமையான பயிற்சி, யக்ஷகானம் கலையின் மீதான பாரம்பரியத்தை உலகறியச் செய்தது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற காந்தாரா, அவரைப் பான்-இந்தியா ஸ்டாராக உயர்த்தியது.
இந்தப் படத்திற்காக ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருதில் சிறந்த முன்னணி நடிகருக்கான விருது கிடைத்தது.
Kantara A Legend: "250 நாள் படப்பிடிப்பு; இது வெறும் சினிமா அல்ல.." - காந்தாரா இயக்குநர் சொல்வதென்ன?
ஹிட் அடிக்கும் படங்களுக்கு சீக்குவல் எடுக்கும் வழக்கம் இந்திய சினிமாவில் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும் விஷயம். செயற்கையான தன்மையில் கதையை இழுத்து ஒரு இரண்டாம் பாகத்தை எடுத்துவிடக் கூடாது என்பதில் ரிஷப் ஷெட்டி முழு கவனமாக இருந்தார். அதற்கென மூன்றாண்டுகளுக்குத் தன்னுடைய கவனத்தை வேறெங்கும் சிதறவிடாமல் முழுவீச்சாக 'காந்தாரா சாப்டர் 1' படத்தை எடுத்திருக்கிறார்.
சிவாவின் மூதாதையரின் கதையைச் சொல்லும் ப்ரீக்வல் திரைப்படமாக இது வந்திருக்கும் 'காந்தாரா சாப்டர் 1' அதிரடியான திரையரங்க அனுபவத்தைத் தரும் பிரம்மாண்ட படைப்பாக அவர் எடுத்திருக்கிறார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 12, 2025, 10:55 am
அமெரிக்க நடிகை டயேன் கீட்டன் காலமானார்
October 10, 2025, 3:10 pm
சிவகார்த்திகேயன் படம் வித்தியாசமாக இருக்கும்: வெங்கட்பிரபு
October 6, 2025, 8:09 pm
``தனுஷ் இளம் வயதில் முதிர்ந்த படைப்பாற்றல் திறன் கொண்டிருக்கிறார்'' - `இட்லி கடை' குறித்து சீமான்
October 4, 2025, 8:40 pm
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நிச்சயதார்த்தம்
October 3, 2025, 10:40 pm
பிரபல இந்தி பாடகி ஆஷா போஸ்லேவின் குரலை AI மூலம் மறுஉருவாக்கம் செய்ய தடை
October 1, 2025, 11:07 pm
முட்டாள் எழுதிய கதை: புதிய திரைப்படம்
October 1, 2025, 3:16 pm
நடிகை ஊர்வசி ரவுதேலாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை
September 29, 2025, 11:04 pm