நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கட்டடங்களின் பாதுகாப்பை சோதிக்கவிருக்கும் ஜோகூர் மாநில அரசு

ஜோகூர் பாரு: 

அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கங்களை அடுத்து, ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் பாதுகாப்பை மறுஆய்வு செய்யவிருப்பதாக ஜொகூர் மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய கட்டடங்களுக்கான கட்டுமானத் தரநிலைகளும் மறுஆய்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டடங்களின் மறு ஆய்வில் பல அமைப்புகள் சம்பந்தப்பட்டிருக்கும்.

பெரிய கட்டடங்கள் மட்டுமல்லாமல் பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள், கற்றல் அமைப்புகள், குடியிருப்பு வட்டாரங்கள் ஆகியவையும் சோதிக்கப்படும்.

கடந்த மாதம் 27ஆம் தேதி பத்து பஹாட் வட்டாரத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதற்கு முன்னதாக, ஆகஸ்ட் மாதத்தில் ஜொகூரின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அவை மிதமான அளவில் ஏற்பட்டிருந்தாலும் செகாமட் (Segamat), யோங் பெங் (Yong Peng), குலுவாங் (Kluang) ஆகிய வட்டாரங்களில் குடியிருப்பாளர்கள் நில அதிர்வுகளை உணர்ந்தனர்.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை அதிகாரிகள் செய்ய மாநில அரசு பணித்துள்ளது.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset