நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேல் படையால் கைதான மலேசியர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்வு

சிப்பாங்:

இஸ்ரேல் படையால் கைதான மலேசியர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.

காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எப்) பணியில் மலேசிய தன்னார்வலர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

இதில் இதுவரை 12 மலேசியர்கள் சியோனிச ஆட்சி கப்பலை இடைமறித்த பின்னர் இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கிராண்டே புளூ கப்பலைச் சேர்ந்த ஃபரா லீ, டேனிஷ் நஸ்ராம் ஆகியோர் ஆகக் கடைசியாக கைதானார்கள்.

12 தன்னார்வலர்களுக்கும் அவசரகால செய்தி சுமுத் நூசாந்தரா சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

இது அவர்கள் இஸ்ரேலிய காவலில் இருப்பதைக் குறிக்கிறது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset