நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான்காம் வகுப்பு மாணவனின் மரணத்திற்கு கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்: போலிஸ்

ரெம்பாவ்:

பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவனின் மரணத்திற்கு கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக உறுதி செய்யப்பட்டது.

நெகிரி செம்பிலான் போலிஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமது தெரிவித்தார்.

சிரம்பானில் உள்ள ஒரு பள்ளியின் ஆண்கள் கழிப்பறையில் நேற்று மயக்கமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நான்காம் வகுப்பு மாணவன் இறந்து கிடந்தான்.

அம்மாணவனின் மரணத்திற்கு கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை இங்குள்ள ரெம்பாவ் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவப் பிரிவில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனை முடிவுகளில் பாதிக்கப்பட்டவரின் உடலில் வேறு எந்த காயங்களும் இல்லை என்றும் கண்டறியப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset