நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசா தன்னார்வ குழுவைச் சேர்ந்த மலேசியர்கள் கைது அமெரிக்க தூதரகம் முன் கண்டன மறியல்

கோலாலம்பூர்:

காசா தன்னார்வ குழுவைச் சேர்ந்த மலேசியர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க தூதரகம் முன் இன்று கண்டன மறியல் நடத்தப்பட்டது.

ஜிஎஸ்எப் எனும் காசாவிற்கான மனிதாபிமான உதவித் தன்னார்வலர்களை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நண்பகல் 12 மணி முதல் இங்குள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பாதுகாப்புப் படையினர் அமெரிக்க தூதரகத்தை நெருங்குவதைத் தடுப்பதைக் காண முடிந்தது.

மேலும் சந்தித்த ஒரு பாதுகாப்பு அதிகாரியின் கூற்றுப்படி, இந்தக் கூட்டம் கடைசி நிமிடத்தில் திட்டமிடப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆரம்பத்தில் மாலை 4 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டப் பேரணி திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது தலைகீழாக நடந்துள்ளது.

பேரணியில் பங்கேற்ற 51 வயதான ரினா ஆலிம், மனிதாபிமான உதவிப் பணிக்கு ஆதரவைத் தெரிவிக்கவும், மலேசியாவைச் சேர்ந்த 12 பேர் உட்பட 201 ஜிஎஸ்எப் ஆர்வலர்களை இஸ்ரேல் கைது செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் பேரணியில் இணைந்ததாகக் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset