நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசா மக்களுக்கான மனிதாபிமானப் பணியை தடுப்பது மனித உரிமை மீறலாகும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்

கோலாலம்பூர்:

காசா மக்களுக்கான மனிதாபிமானப் பணியை தடுப்பது மனித உரிமை மீறலாகும்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் இதனை கூறினார்.

காசா மக்களுக்கு மருந்து, உணவு, அடிப்படைத் தேவைகளை வழங்கும் மனிதாபிமானப் பணியான குளோபல் சுமுத் புளோட்டிலாவை இஸ்ரேல் தடுத்து நிறுத்தி உள்ளது.

இந்த புளோட்டிலா பணி இராணுவம் அல்ல.

மாறாக மனிதநேயம், ஒற்றுமை, ஒருவருக்கொருவர் அன்பு ஆகியவற்றின் சின்னமாகும்.

கொடூரமான முற்றுகைகள், தொடர்ச்சியான தாக்குதல்களால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு நம்பிக்கையின் ஒளியை வழங்க மலேசியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பைப் பணயம் வைக்கத் தயாராக உள்ளனர்.

சர்வதேச கடலில் அமைதியான பணியைத் தடுத்து நிறுத்திய இஸ்ரேலின் நடவடிக்கை சர்வதேச சட்டத்தை அவமதிப்பது மட்டுமல்லாமல்,

உலகளாவிய மனித விழுமியங்களையும் அவமதிப்பதாகும்.

காசாவில் மிகவும் தேவைப்படும் சமூகங்களுக்கு உதவி வழங்குவதற்கான உலகளாவிய முயற்சிகளையும் இது குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

மேலும் மலேசியாவைச் சேர்ந்த பல தன்னார்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்ட வேண்டும்.

ஆக அனைத்துலக அரங்கில் மலேசியாவின் ராஜதந்திர நிலைப்பாட்டைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும்.

மேலும் ஐ.நா., இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புகளை கொண்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து ஆர்வலர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

குறிப்பாக மனிதாபிமான உதவிகள் கட்டுப்பாடுகள் இல்லாமல் காசா மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

இதற்கு பிரதமரின் தலைமையிலான மலேசிய அரசாங்கத்தையும்  விஸ்மா புத்ராவையும் நாங்கள்  கேட்டுக் கொள்கிறோம்.

காசா மக்களுடன் மலேசிய மக்கள் சக்தி கட்சி உறுதியாக நிற்கிறது.

அமைதி, உலகளாவிய ஒற்றுமைக்கான செய்தியைக் கொண்டு வர தங்கள் உயிரைப் பணயம் வைத்த துணிச்சலான கடற்படைத் தன்னார்வலர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset