நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

முட்டாள் எழுதிய கதை: புதிய திரைப்படம்

கோடம்பாக்கம்

வாழ்க்கை என்பது முட்டாள் ஒருவனால் எழுதப்பட்ட கதை வெற்று ஆரவாரமும் வீண் ஆவேசமும் பூஜியத்தை குறிக்கும் சூனியங்கள்.... என்கிறார் ஷேக்ஸ்பியர்

எவ்வளவு பெரிய புத்திசாலி பெண்ணும் இந்த சமுதாயத்தில், ஏதோ ஒரு இடத்தில் ஒரு ஆணால் வேட்டையாடப்பட்டு கொண்டே இருக்கிறாள்.

ஒரு ஆண் தன்னுடைய மகளை தெய்வமாக பார்க்கிறான், அதே ஆண் அதே வயதுடைய வேறு ஒரு பெண்ணை SEX-TOY ஆகவே பார்க்கிறான். பல விதமாக வேட்டையாடப்பட்ட பெண்களின், சமுதாயத்திற்கு எதிரான கோபமே இந்த "முட்டாள் எழுதிய கதை" படம் என்கின்றார் பா.ஆனந்தராஜன்.

இவர், இதற்குமுன் கிச்சி கிச்சி, யுத்தகாண்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவை பாலா ஜி இராமசாமி மேற்கொள்ள, இசை ஜோகன், எடிட்டிங் வில்சி, இணைஇயக்குனர் ரா.பிரதீப் குமார்.

மேலும் இந்த கதையின் நாயகிகளாக ரித்விகா, வினோதினி வைத்யநாதன், ரிஷா ஜகோப்ஸ், மது நடித்திருக்கிறார்கள். இவர்களுடன்  யோக் ஜபீ, வேலு பிரபாகரன், நாஞ்சில் சம்பத், TSR, மரீனா மைகேல்,KPYயோகி ராஜ், மற்றும் பலர் நடித்து இருகிறார்கள்.

இப்படத்தை எடிசன் திரை ஆலயம் சார்பாக வேணுகோபால் தயாரிக்கிறார். தயாரிப்பு மேற்பார்வை நம்பி மங்கை செய்கிறார். இத்திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

- நிகில் முருகன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset