நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

பிலிப்பைன்ஸின் செபு, அண்டை பகுதிகளைத் தாக்கிய பேரழிவு தரும் நிலநடுக்கத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். பல குடும்பங்கள் அனுபவித்த இழப்பு, கஷ்டங்கள் எங்களை மிகவும் பாதிக்கின்றன, மேலும் இந்த துயரமான நேரத்தில் பிலிப்பைன்ஸ் மக்களுடன் மலேசியா துக்கத்தில் ஆழ்ந்துள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மலேசிய அரசாங்கத்தின் சார்பாகவும் மக்களின் சார்பாகவும், பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும், குறிப்பாக தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும் எங்கள் மனமார்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

காயமடைந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இந்த துயரத்தால் உயிர் இழந்த அனைவருடனும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன.

மலேசியா பிலிப்பைன்ஸுடன் முழு ஒற்றுமையுடன் நிற்கிறது. நிவாரணம், மீட்பு முயற்சிகளில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். 

மேலும் பிலிப்பைன்ஸ் மக்களின் வலிமையும் மீள்தன்மையும் இந்த கடினமான நாட்களில் அவர்களைத் தாங்கிப் பிடிக்கும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம் என்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset