நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிரம்ப்பின் எந்தவொரு பழிவாங்கலையும் தவிர்க்க  அரசாங்கம் அவருக்கான அழைப்பை திரும்பப் பெற வேண்டிய அவசியமில்லை: கைரி

கோலாலம்பூர்:

டிரம்ப்பின் எந்தவொரு பழிவாங்கலையும் தவிர்க்க அரசாங்கம் அவருக்கான அழைப்பை திரும்பப் பெற வேண்டிய அவசியமில்லை.

முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் இதனை கூறினார்.

அழைப்பை திரும்ப பெற்றால் அவர் நமக்கு பதிலளிப்பாரா? என்று கேட்டால் நிச்சயம் பதிலளிப்பார்.

அவர் 90% வரி விதிப்பது அல்லது புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது வாயிலாக நிச்சயம் பதிலளிப்பார்.

ஏனென்றால் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவரைப் பொறுத்தவரை மலேசியா மிகச் சிறிய நாடாகும்.

எனவே நீங்கள் அழைப்பைத் திரும்பப் பெற்றால் நான் கட்டணத்தை 90 சதவீதம் வரை உயர்த்துவேன் என்பார்.

ஆக இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு தவிர்க்க வேண்டும் என்று கைரி கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset