
செய்திகள் மலேசியா
கரையான் அரிப்பால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பாதுகாப்பில் சமரசம் செய்யப்படாது: சுவா
ரவாங்:
ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பாதுகாப்பில் சமரசம் செய்யப்படாது என்று ரவாங் உறுப்பினர் சுவா உறுதியாக தெரிவித்தார்.
கரையான் அரிப்பினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ரவாங் தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்.
அப்பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு சிலாங்கூர் மாநில மற்றும் மத்திய அரசுகள் தொடர்ந்து அக்கறை செலுத்தி வரகிறது.
ரவாங் பள்ளியின் நிலைமையை நேரில் காண்பதற்காக செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங், மாவட்ட கல்வி இலாகா அதிகாரிகளோடு தாம் பள்ளிக்கு வருகை புரிந்ததாக அவர் சொன்னார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக நான்கு வகுப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.
பொதுப்பணித் துறையின் ஆலோசனையின் பேரில் அந்த வகுப்பறைகள் கடந்தாண்டு முதல் காலி செய்யப்பட்டு விட்டன.
அந்த வகுப்புகளை சீரமைப்பதற்கு பள்ளி நிர்வாகமும் மாவட்ட கல்வி இலாகாவும் விண்ணப்பம் செய்துள்ளன.
இப்பள்ளியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 335,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்ய பரிந்துரைக்கப்பட்ட நிலையில் பள்ளியின் கட்டமைப்பு மோசமான நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு 13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் பள்ளியை முழுமையாக மறுசீரமைப்பு செய்வதே சிறந்த து என அரசாங்கம் கருதுகிறது என்று அவர் கூறினார்.
பாதுகாப்பற்ற நிலையில் மாணவர்கள் கல்வி பயில இயலாது என்பதால் இந்த வகுப்பறைகள் பயன்படுத்தப்படவில்லை.
கடந்தாண்டு தொடங்கி பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதர வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2025, 7:32 pm
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்: பிரதமர் அன்வார்
October 1, 2025, 7:06 pm
நெகிரி செம்பிலான் பகாவ் சீரடி பாபா வழிபாட்டு மையம் புது பொழிவு பெறுகிறது
October 1, 2025, 7:04 pm
2026 முதல் மின்னியல் சிகரெட் விற்பனையை தடை செய்ய பேரா மாநில அரசு முடிவு: சிவநேசன்
October 1, 2025, 4:06 pm
VEP வாகன நுழைவு அனுமதி: 3,148 சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கு அபராதம்
October 1, 2025, 3:21 pm
நாயை அடித்துக் கொன்றதற்காக ஆடவருக்கு 20,000 ரிங்கிட் அபராதம்
October 1, 2025, 1:23 pm