நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிரம்பின் வருகையை அனைத்துலக கட்டமைப்பில் பார்க்க வேண்டும்: இஸ்மாயில் சப்ரி

கோலாலம்பூர்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகையை அனைத்துலக கட்டமைப்பில் பார்க்க வேண்டும்

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி இதனை கூறினார்.

ஆசியான் உச்ச நிலை மாநாட்டிற்காக டிரம்ப் இந்த மாதம் மலேசியா வரவுள்ளார்.

அவரின் வருகை தொடர்பான பிரச்சினையை அனைத்துலக உறவுகளின் கட்டமைப்பிற்குள் பார்க்க வேண்டும்.

ஆசியான் தலைவராக மலேசியாவின் நிலைப்பாட்டின் வெளிச்சத்தில் இந்த அம்சத்தைப் பார்க்க வேண்டும்.

மேலும் அது அமைதி, சுதந்திரம், நடுநிலைமை மண்டலத்தின் கொள்கையால் பிணைக்கப்பட்டுள்ளது.

டிரம்பிற்கு அழைப்பு விடுத்த பிரச்சினையில், இன்றைய அரசாங்கத் தலைமை என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்.

எனவே முடிவெடுப்பதை அவர்களின் முடிவுக்கு விட்டுவிடுகிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset