
செய்திகள் மலேசியா
காசாவிற்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கடற்படை படகுகளை சேதப்படுத்தி இஸ்ரேலிய இராணுவக் கப்பல்கள் அச்சுறுத்தல்
கோலாலம்பூர்:
காசாவிற்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கடற்படை படகுகளை சேதப்படுத்தி இஸ்ரேலிய இராணுவக் கப்பல்கள் அச்சுறுத்தி உள்ளன.
ஒரு இஸ்ரேலிய இராணுவக் கப்பல் எங்கள் படகை நெருங்கி, அச்சுறுத்தல் விடுத்து, எங்கள் தகவல் தொடர்பு அமைப்பை கடுமையாக சேதப்படுத்தியது.
எங்கள் முக்கிய படகுகளான ALMA, SIRIUS ஐஆகியவற்றைச் சுற்றி வளைத்து ஆபத்தான நடவடிக்கைகளில் இஸ்ரேலிய இராணுவக் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன
ரஹ்மத் இஹ்சான் அல்லது பியூ ரஹ்மத் என்று அழைக்கப்படும் முகநூல் ரஹ்மத் சுமுத் நுசாந்தராவின் சமீபத்திய பதிவு இதுவாகும்.
இது இன்ஸ்டாகிராம் மூலமான THIAGOAVILABRASIL ஐ மேற்கோள் காட்டியது.
குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா மனிதாபிமான உதவிப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களில் ஒருவரான அவர்,
யாயாசன் மவாத்தா பகிர்ந்து கொண்ட சம்பவத்தின் படத்தைச் சேர்த்து, அது தொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவையும் மேற்கோள் காட்டினார்.
மேலும் மின்னணு சாதனங்களுக்கு சேதம் ஏற்பட்ட போதிலும் யாரும் காயமடையவில்லை.
முற்றுகையை உடைத்து மனிதாபிமான வழித்தடத்தைத் திறக்க நாங்கள் காசாவுக்குப் பயணம் தொடர்ந்தோம் என்றார்.
இதனிடையே அனடோலு ஏஜென்சி அறிக்கையின் அடிப்படையில்,
மனிதாபிமான உதவிப் பணியில் முக்கிய கப்பலான அல்மாவுடனான தொடர்பு ஒரு சிறிய தடங்கலுக்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்டதாக படகில் இருந்த அல் ஜசீரா பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு இஸ்ரேலிய கப்பல் அல்மாவை சுமார் 1.5 மீட்டருக்குள் நெருங்கி, அனைத்து தகவல் தொடர்பு அமைப்புகளையும் அதன் இயந்திரங்களையும் தடுத்து, செயலிழக்க செய்தது என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2025, 7:32 pm
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்: பிரதமர் அன்வார்
October 1, 2025, 7:06 pm
நெகிரி செம்பிலான் பகாவ் சீரடி பாபா வழிபாட்டு மையம் புது பொழிவு பெறுகிறது
October 1, 2025, 7:04 pm
2026 முதல் மின்னியல் சிகரெட் விற்பனையை தடை செய்ய பேரா மாநில அரசு முடிவு: சிவநேசன்
October 1, 2025, 4:06 pm
VEP வாகன நுழைவு அனுமதி: 3,148 சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கு அபராதம்
October 1, 2025, 3:21 pm
நாயை அடித்துக் கொன்றதற்காக ஆடவருக்கு 20,000 ரிங்கிட் அபராதம்
October 1, 2025, 1:23 pm