நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா மாநில தேர்தலில் கெஅடிலான், நம்பிக்கை கூட்டணி அதிக இடங்களில் போட்டியிடாது: பிரதமர்

கோலாலம்பூர்:

சபா மாநில தேர்தலில் கெஅடிலான், நம்பிக்கை கூட்டணி அதிக இடங்களில் போட்டியிடாது.

இதை தாம் ஏற்றுக் கொள்வதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

சபா மாநிலத்தின் 17ஆவது தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிட அதிக இடங்கள் கிடைக்காததில் கெஅடிலான், நம்பிக்கை கூட்டணி ஆகியவற்றின் நிலைப்பாட்டை  ஏற்றுக் கொள்கிறேன்.

மேலும் கெஅடிலான் ஒரு சில இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது.

மற்ற பல இடங்கள் நம்பிக்கை கூட்டணியில் உள்ள கட்சி கூட்டாளிகளால் போட்டியிடப்படுகின்றன.

பிற பகுதிகளில் ஒரு கூட்டு கூட்டாளியுடன் கூட்டணி உள்ளது.

தேர்தலுக்குப் பிறகு மாநிலங்களுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான நல்ல உறவுகளைப் பேண முடியும் என்பது தான் முக்கியம் என்று அவர் கூறினார்.

தேர்தலின் போது, ​​நாம் கவனமாக சிந்திக்க வேண்டும். 

ஒரு சில தொகுதிகளில் கெஅடிலான் போட்டியிடும். மற்ற தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும்.

ஆனால் அனைவரும் நம்பிக்கை கூட்டணியில் உள்ள நண்பர்கள் ஆவர். இது தான் முக்கியம்.

மாநிலத்திற்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இது செய்யப்படுகிறது.

கெஅடிலான், நம்பிக்கை கூட்டணிக்கு இதைத் தான் நாம் உறுதி செய்ய வேண்டும்.

அதிக இடங்கள் இல்லாதது ஒரு பிரச்சினை இல்லை என்று  அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset