நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற பயத்தில் எஸ்ஆர்சி வாரியம் அமைதியாக இருப்பது நியாயமற்றது: நஜிப்பின் வழக்கறிஞர்

கோலாலம்பூர்:

பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற பயத்தில் எஸ்ஆர்சி வாரியக் குழு அமைதியாக இருப்பது நியாயமற்றது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ  நஜிப்பின் வழக்கறிஞர்  முகமது ஃபர்ஹான் முகமது ஷாஃபி இதனை கூறினார்..

வாரியக் குழு அதன் கடன்கள், முதலீடுகளை மேலும் விசாரிப்பதைத் தடுக்க பயத்தை ஒரு சாக்காகப் பயன்படுத்த முடியாது.

அதற்கு பதிலாக எஸ்ஆர்சியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி நிக் பைசல் அரிஃப் கமிலின் தகவல்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டும்.

அதே வேளையில் அவர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.

இயக்குநர்கள் குழு வெறும் வழிமுறைகளைப் பின்பற்றுகிறது என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், அது பெரு நிறுவன நிர்வாகத்திற்கு என்ன செய்தியை அனுப்பும்?.

அரசுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள், நிறுவனத்திற்கான பிரச்சினைகள், கடமைகள் பற்றி அறிந்திருந்தாலும், அமைதியாக உட்கார்ந்து, அறிவுறுத்தல்களை குருட்டுத்தனமாகப் பின்பற்ற அனுமதிக்கப்படுகிறார்களா?.

அது நல்லாட்சி அல்ல. 

மலேசியாவில் பெரிய நிறுவன நிர்வாகத்தின் சூழலில் இதுபோன்ற காரணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, இந்த வழக்கில் நீதிமன்றம் வழிகாட்டுதல்களை அமைக்க வேண்டும்.

இன்று உயர் நீதிமன்ற நீதிபதி அகமது ஃபைரோஸ் ஜைனல் அபிடின் முன் வாதிடும்போது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset