நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் மரணம்: 9 பேர் காயம்

கூச்சிங்:

இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் மரணமடைந்த வேளையில் 9 பேர் காயமடைந்தனர்.

சரவா தீயணைப்பு,  மீட்புத் துறை செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் இதனை கூறினார்.

இன்று பெட்டோங்கில் உள்ள ஸ்க்ராங் கிளினிக் முன் வேன்,  பிக்கப் டிரக்  நேருக்கு நேர் மோதக் கொண்டன.

காலை 11.59 மணிக்கு அவசர அழைப்பு வந்தது. மதியம் 12.22 மணிக்கு சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்றனர்.

சம்பவ இடத்தில் விபத்தில் சிக்கிய  இரண்டு ஆண்கள் மரணமடைந்தனர்.  ஒன்பது பேர் காயமடைந்தனர்.

வேனில் பயணித்த இரண்டு ஆண்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மலேசிய சுகாதார அமைச்சின் மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது  என்று அவர்  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset