நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசாவுக்கான மனிதாபிமான உதவிக்கு சென்ற சில படகுகள் பின்வாங்குகின்றன: பணி தொடர பெரிய மாற்றங்கள் தேவை

கோலாலம்பூர்:

குளோபல் மிஷன் சுமுத் ஃப்ளோட்டிலாவில் பங்கேற்ற பல படகுகள் நேற்று காசாவுக்கான பயணத்திலிருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் பணி தொடரும் முன் பெரிய மாற்றங்கள் தேவைப்பட்டன.

நண்பகல் 12 மணி நிலவரப்படி  கிட்டத்தட்ட 30 படகுகளை உள்ளடக்கிய படகு தெற்கு கிரேக்க கடற்பரப்பை அடைந்து விட்டன.

இந்த பணியில் பங்கேற்ற மலேசிய முஸ்லிம் கேர் ஊடக இயக்குனர் அஸ்ரி துவான் ஹுசைன் இந்தத் தகவலைக் கூறினார்.

நாங்கள் வகுத்த திட்டத்தைப் பின்பற்றியிருந்தால் தொடர்ந்து பயணித்திருக்க வேண்டும். கிரேக்கத்தில் நிற்கக்கூடாது, ஆனால் நேற்று சில காரணங்கள் இருந்தன.

பல கேப்டன்களும் அவர்களது உதவியாளர்களும் பணியில் பங்கேற்பதில் இருந்து விலகியதால், மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

உண்மையான படகுகள், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அவர்கள் விலகியதற்கான காரணம் எங்களுக்குத் தெரியாது.

எனவே ஏற்பாட்டாளர்கள் பயணிகளை மற்ற படகுகளுக்கு அல்லது ஒரு புதிய கேப்டனுக்கு மாற்ற வேண்டும்.

அதில் நான் இருந்த படகும் அடங்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset