நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் அரச திருமண விழாவையொட்டி கிள்ளானில் நாளை முதல் 10 சாலைகள் மூடப்படும்

கிள்ளான்:

சிலாங்கூர் அரச திருமண விழாவையொட்டி கிள்ளானில் நாளை முதல் 10 சாலைகள் மூடப்படும்.

சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு அமீர் ஷா இப்னி சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் அரச திருமண விழா மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது.

இவ்விழா கிள்ளானில் உள்ள அரண்மனையில் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு கிள்ளானைச் சுற்றியுள்ள பல முக்கிய சாலைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 29, அக்டோபர் 1 முதல் அக்டோபர் 2 வரை மூடப்படும்.

திருமண ஊர்வலத்தை எளிதாக்கவும், அனைத்து தரப்பினரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், 

நாளை காலை 8 மணி முதல் நிறைவு பெறும் வரை சாலை மூடல் அமலில் இருக்கும் என்று தென் கிள்ளான் போலிஸ் தெரிவித்துள்ளது.

ஜாலான் தெங்கு டியாவுடின் முதல் ஜாலான் இஸ்தானா, ஜாலான் இஸ்தானா முதல் சிம்பாங் லீமா சுற்று பாதை, ஜாலான் இஸ்தானா முதல் ஜாலான் ஸ்டேடியம் சுல்தான் சுலைமான், ஜாலான் இஸ்தானா முதல் லோரோங் திங்காட், ஜாலான் இஸ்தானா முதல் ஜாலான் பெகாவாய், ஜாலான் இஸ்தானாவிலிருந்து ஜாலான் டெங்குக் 2, ஜாலான் இஸ்தானாவிலிருந்து ஜாலான் சிம்லாங் 2, ஜாலான் சிம்லானாப் முதல் ஜாலான் கேலனாப் வரை சாலைகள் முழுமையாக மூடப்படும்.

மேலும் ஜாலான் டத்தோ ஹம்சா முதல் ஜாலான் தெங்கு கிளானா, ஜாலான் ராஜா ஜூமாத் முதல் ஜாலான் இஸ்தானா வரை ஆகிய இரண்டு சாலைகள் கட்டங்களாக மூடப்படும்.

ஆக பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என போலிஸ் கேட்டுக் கொண்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset