நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோதல்களைத் தீர்க்க வட்டார முகாம்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்: மலேசியா ஐ.நா.வை வலியுறுத்துகிறது

நியூயார்க்:

மோதல்களைத் தீர்க்க வட்டார  முகாம்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என மலேசியா ஐ.நா.வை வலியுறுத்துகிறது.

வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.

உலக அமைதி முயற்சிகள் தற்போது புவிசார் அரசியல் முட்டுக்கட்டை, அமைதி செயல்முறையின் மீதான தாக்குதல்களால் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த மோதல் மத்தியஸ்த முயற்சிகளில் வட்டார அமைப்புகளின் பங்கை ஐக்கிய நாடுகள் சபையை (ஐ.நா) வலுப்படுத்த வேண்டும்.

ஆசியான், ஆப்பிரிக்க ஒன்றியம் போன்ற வட்டார கூட்டணிகள் கலாச்சார புரிதல், உள்ளூர் சூழல், உள்ளூர் சட்டபூர்வமான தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நன்மைகளைக் கொண்டுள்ளன.

அவை மோதல்களை மிகவும் திறம்பட தீர்க்க உதவும்.

நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா. மத்தியஸ்த நண்பர்கள் குழுவின் 15ஆவது அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset