நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

படைப்பு கலைத் துறையில் உள்ள தொழிலாளர்களின் ஊதியம் இப்போது பாதுகாக்கப்படுகிறது: ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்:

படைப்பு கலைத் துறையில் உள்ள தொழிலாளர்களின் ஊதியம் இப்போது பாதுகாக்கப்படுகிறது.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.

படைப்பு கலைத் துறையில் உள்ள கிக் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.

அத்தொழிலாளர்களுக்கான ஒப்பந்தத்தில் ஊதியக் காலம் குறிப்பிடப்படவில்லை என்றால், 

சேவை தேதிக்குப் பிறகு ஒரு வாரத்திற்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதும் இதில் அடங்கும்.

கிக் மசோதா முதலாளிகளால் சம்பளச் சீட்டுகளை வழங்குவதன் மூலம் நலனையும் வலியுறுத்துகிறது.

ஒப்பந்த நிறுவனம் அல்லது முதலாளி ஊழியர் கோரினால் கட்டணச் சீட்டை வழங்க கடமைப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூரில் மலேசிய ஊழியர் சங்கத்துடன் இணைந்து 100 படைப்பு கலைக் குழுக்களுக்கு அளித்த விளக்கத்தில்  அவர் இதனை கூறினார்.

புதிய சட்டத்தின் கீழ் அவர்களின் உரிமைகள், பாதுகாப்புகள் குறித்து கிக் தொழிலாளர்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்குவதற்காக இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

தயாரிப்பாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், அனிமேஷன் மற்றும் கிராஃபிக் வடிவமைப்பாளர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

மலேசியாவில் கலைத்துறையின் 100 ஆண்டுகால இருப்பில் உரிமைகள், நீதி மறுக்கப்பட்ட கிக் தொழிலாளர்களின் நிலையை இந்தப் புதிய சட்டம் வரையறுக்கும் என்றும் ஸ்டீவன் சிம் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset