செய்திகள் கலைகள்
தேனிசைத் தென்றல் தேவாவுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உயரிய மரியாதை
சிட்னி:
அவைத்தலைவர் இருக்கையில் அமரவைத்து, செங்கோலைத் தந்ததற்காக ஆஸ்திரேலிய அரசுக்கு தேவா நன்றி கூறினார்.
தமிழ் திரை இசையில் பல சாதனைகளை புரிந்து ரசிகர்களால் தேனிசைத் தென்றல் என்று அன்புடன் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவாவை ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் சமீபத்தில் கெளரவித்தது.
ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த தேவாவும் அவரது இசைகுழுவினரும் ஆஸ்திரேலிய அரசுக்கு இதற்காக நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தேவா கூறியதாவது: "ஆஸ்திரேலிய தமிழ் கலை, பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்களித்த மரியாதை குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.
எனக்கும் எனது இசைக்கலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கௌரவத்தை வழங்கியதற்காக அன்புள்ள லாரன்ஸ் அண்ணாதுரை மற்றும் ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செப்டம்பர் 24ம் தேதி மாலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டு, அவைத்தலைவர் இருக்கையில் அமர வாய்ப்பு அளிக்கப்பட்டு, மரியாதைக்குரிய செங்கோல் வழங்கப்பட்டது. இந்த தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை, கலாச்சாரத்தை பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் இது சொந்தம்.
எனது அன்பான ரசிகர்கள், நலம் விரும்பிகளுக்கு இந்த பெருமைமிகு தருணத்தில் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது 36 ஆண்டுகால இசைப் பயணத்தில் உங்கள் அன்பும் ஆதரவும் எனது மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது. இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்."
- நிகில் முருகன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2025, 12:58 pm
பலூசிஸ்தானை ஆதரித்து பேசினாரா சல்மான் கான்?: தீவிரவாதிகள் பட்டியலில் சல்மானை சேர்த்த பாகிஸ்தான்
October 24, 2025, 12:03 pm
"தம்பி, தவறான தகவலைப் பரப்புவது தீங்கையே தரும்": விஜய் குறித்து பரவிய செய்திக்கு நடிகர் சூரி விளக்கம்
October 23, 2025, 4:33 pm
நடிகை மனோரமாவின் மகனும் நடிகருமான பூபதி காலமானார்
October 23, 2025, 3:32 pm
இசையமைப்பாளரும் தேவாவின் சகோதரருமான சபேஷ் காலமானார்
October 20, 2025, 9:18 pm
துல்கர் சல்மானின் ‘காந்தா’ நவம்பர் 14இல் வெளியாகிறது
October 17, 2025, 8:11 pm
இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025 சென்னையில் தொடங்கியது
October 17, 2025, 12:02 pm
பீட் தலைவன் மாபெரும் டிஜே போட்டியில் டிஜே நேஷ் வெற்றி பெற்றார்: குணராஜ்
October 12, 2025, 10:55 am
