நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் மின் சிகரெட் பயன்பாடு அடுத்தாண்டு தடை செய்யப்படும்: சுகாதார அமைச்சர்

புத்ராஜெயா:

மின் சிகரெட் விற்பனையையும் பயன்பாட்டையும் மலேசியா அடுத்த ஆண்டு தடை செய்யவுள்ளது.
 
சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சூல்கிஃப்லி அகமது இதனைத் தெரிவித்தார்.

தடை படிப்படியாக அமலுக்கு வரும் என்று கூறிய அவர் நிபுணர்கள் ஒரு குழுவாகக் கூடி அது தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்கின்றனர்.

மின்-சிகரெட் புகைப்பதைத் தடை செய்வது உறுதி. தடை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது அமைச்சரவையின் ஒப்புதலைப் பொறுத்தது.

இருப்பினும் அடுத்த ஆண்டின் மத்திக்குள் அதை நடைமுறைப்படுத்துமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தும்.

இல்லாவிட்டால் அடுத்த ஆண்டின் பிற்பாதியில் தடை அமலுக்கு வரும் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset