
செய்திகள் மலேசியா
டத்தோஸ்ரீ அன்வாரின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மீதான விசாரணை 2022இல் நிறைவடைந்தது: எம்ஏசிசி
புத்ராஜெயா:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மீதான விசாரணை கடந்த 2022ஆம் ஆண்டு நிறைவடைந்தது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இஸ்ரேல் உட்பட 20 வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இக் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை 2022ஆம் ஆண்டே நிறைவடைந்தது.
2013ஆம் ஆண்டு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எழுப்பப்பட்ட பிரச்சினையுடன் தொடர்புடைய டிக்டாக் பயன்பாட்டில் வைரலான உள்ளடக்கம் குறித்து எம்ஏசிசி அறிந்திருப்பதாக ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து 1999ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு நிறுவனம் விசாரணை நடத்தியது.
டத்தோஸ்ரீ அன்வாரை ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புபடுத்துவதற்கான எந்தவித ஆதாரமோ அல்லது முகாந்திரமோ இல்லை என்று விசாரணையில் கண்டறியப்பட்டது.
விசாரணையின் முடிவுகள் குறித்த விளக்கத்தை முன்னாள் ஏசிஏ புலனாய்வு இயக்குநர் டத்தோ அப்துல் ரசாக் இட்ரிஸ் 2009 ஆம் ஆண்டு அளித்த பிரமாண வாக்குமூலத்திலும் பதிவு செய்தார்.
மேலும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கூறப்பட்டபடி, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்குச் சொந்தமான எந்தவொரு வங்கிக் கணக்குகளின் பட்டியலையும் விக்கிலீக்ஸ் ஒருபோதும் வெளியிடவில்லை என்றும் மறுத்துள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 26, 2025, 5:32 pm
பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற பயத்தில் எஸ்ஆர்சி வாரியம் அமைதியாக இருப்பது நியாயமற்றது: நஜிப்பின் வழக்கறிஞர்
September 26, 2025, 5:31 pm
இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் மரணம்: 9 பேர் காயம்
September 26, 2025, 5:29 pm
பிரபாகரன் முயற்சியில் செந்தூல் காளியம்மன் ஆலயத்திற்கு நிலப்பட்டா கிடைத்தது
September 26, 2025, 1:25 pm
மோதல்களைத் தீர்க்க வட்டார முகாம்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்: மலேசியா ஐ.நா.வை வலியுறுத்துகிறது
September 26, 2025, 1:22 pm
படைப்பு கலைத் துறையில் உள்ள தொழிலாளர்களின் ஊதியம் இப்போது பாதுகாக்கப்படுகிறது: ஸ்டீவன் சிம்
September 26, 2025, 1:21 pm
மக்கள் இனிப்புகளுக்கு அடிமையாகிவிட்டனர்; தீவிரமான பட்ஜெட் சீர்திருத்தங்கள் தேவை: ரபிசி
September 26, 2025, 12:32 pm
சிலாங்கூர் அரச திருமண விழாவையொட்டி கிள்ளானில் நாளை முதல் 10 சாலைகள் மூடப்படும்
September 26, 2025, 11:10 am