நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

அவரது மரணத்திற்கு குடிப்பழக்கமே காரணம் என்றால் அந்தக் குடிப்பழக்கத்தைக் கண்டு பயம் கொள்ளவேண்டும்

80கள் வரையில் காமெடி என்பது  மேடை நாடக காமெடிதான்..! ஒரே வகை  cliche காமெடி..! போரடிக்க ஆரம்பித்தது. 

தனியார் டிவி  சேனல்கள் வந்த பின்னர்,  சாதாரண மக்களின் காமெடித் திறமைகள் வெளிவரத் தொடங்கின. மேடை காமெடி போலல்லாமல், அவை புதிதாக  Refreshingகாக  இருந்தன. கிராமப்புற இளைஞர்களின்    காமெடித் திறமைகள் நமக்கெல்லாம் தெரிய ஆரம்பித்தது.

விஜய் டிவி செய்த 'கலக்கப் போவது யாரு..?' என்ற நிகழ்ச்சியின் மூலமாகத்தான் மிகப் பலரின் காமெடித் திறமைகள் வெளிவந்தன..!  இவர்களின் காமெடி  கொஞ்சம் coarseஸாகத்தான்  இருக்கும், ஆனால், நமக்கு குபீர் சிரிப்பை வரவழைக்கும்..! நான் இப்போதும் ரீல்ஸில் பார்ப்பவை அந்த காமெடிகள்..!  தற்போது ரொம்ப பாப்புலராக இருப்பவர் ராமர் என்பவர்..! நித்யானந்தாவை troll செய்து ஒருவரின் (பெயர் தெரியவில்லை) காமெடி கிளிப் பார்த்தால்  சிரிச்சி மாளாது..! சில மாதங்கள் முன்னர் அகாலமாக இறந்த 'வடிவேலு பாலாஜி'  என்பவரும் KPY காமெடியில் கலக்கியவர்..! 

இன்று பெரீய ஸ்டாராக இருக்கும் சிவகார்த்திகேயன்,  விஜய் டிவியின் KPY மூலம் உருவானவர்தான்..! சிவகார்த்திகேயேனுக்கு அதிர்ஷடம் இருந்தது. மேலே வந்து விட்டார். ஆனால், பலருக்கு அதிர்ஷ்டம்  இல்லை..! 

அப்படி...   

நல்ல காமெடி திறமைசாலி ரோபோ ஷங்கர்..! மிமிக்ரி, ஸ்டாண்டப் காமெடி, டான்ஸ்,  நேச்சுரலாகவே காமெடி என ஏகப்பட்ட திறமை இருந்த ரோபோ ஷங்கரும் வெகு காலம் அதிர்ஷ்டம் இல்லாமல் இருந்தார்..! ஆனால், அவர், விடாமல், விடவே விடாமல், தன் துரதிர்ஷ்டத்துக்கு எதிராகப் போராடினார்..! ஏதாவது செய்து கொண்டே இருந்தார்..! சமீப காலங்களில் அவருக்கு சினிமா சான்ஸ் கிடைக்க,  அவரின் காமெடித் திறமை வெளிச்சம் பெற ஆரம்பித்தது..! 

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'விலும் 'மாரி'யிலும் அவர் காமெடி ஜொலிக்க ஆரம்பித்தது. அவர் வறுமை ஒழிந்து, நல்ல நிலைமைக்கு வந்தார். Perhaps, அந்த  நிலைமைக்கு வருவதற்குள் அவர் பட்ட கஷ்டங்களினால் அவர் உடம்பு ஆரோக்கியம் வீணாகி விட்டதோ என்னவோ..?  

கலைத்துறையில் இருப்பவர்களின் வாழ்க்கை எல்லோருக்குமே கஷ்டம்தான்.! வெகு சிலருக்குத்தான்  அதிர்ஷ்டம் இருக்கும்,  பலருக்கு இருக்காது..!  கலைஞர்கள் தம் துரதிர்ஷ்டத்தை எதிர்த்துப் போராடுவது என்பது ஈஸியல்ல..! 

அகாலத்தில் அவரை விதி அடித்து விட்டாலும், ரோபா ஷங்கருக்காக கலை உலகம் மட்டுமில்லாமல் பொது மக்கள் பலரும் கண்ணீர் வடிக்கிறார்கள் என்றால்,  அதுதான் அவர் தன் துரதிர்ஷ்டத்தை எதிர்த்துப் போராடி, தன் திறமைக்குப் பெற்ற வெற்றியின் அடையாளம்..! 

ஆனாலும், 
ரோபோ ஷங்கர்  போன்ற  கலைஞர்களின் அகால மரணம், மற்றவருக்குப்  பாடமாக வேண்டும்; உடல் ஆரோக்கியம் காமெடி அல்ல என்ற பாடம்.

அவரது மரணத்திற்கு குடிப்பழக்கமே காரணமென்றால், தத்தம் குடிப்பழக்கத்தைக் குறித்து மற்றவர்கள் பயம் கொள்ள வேண்டும்;  அதைக் குறைக்க/தவிர்க்க வேண்டும்.

'பார்த்துக்கலாம்.." என்று அலட்சியமாக விடுவது, பல நேரங்களில் too late ஆகி விடலாம்.

- ஷங்கர் ராஜரத்தினம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset