செய்திகள் சிந்தனைகள்
வெளவால் - இறைவனின் அற்புதப் படைப்பு: வெள்ளிச் சிந்தனை
இறைவன் ஏன் வெளவால்களைப் படைத்தான் என்று பலமுறை யோசித்ததுண்டு. இரவில் அமைதியாகப் பறக்கும் இந்த அற்புத உயிரினம் சிலபோது ஆச்சரியத்தையும் இன்னும் சிலபோது பயத்தையும் ஒருசேரத் தருகிறது.
ஆனால் இந்த உயிரினத்திற்குப் பின்னால் இருக்கும் நுட்பத்தை இன்றைய விஞ்ஞான உலகம் வெளிப்படுத்துகிறது.
இவை ஒவ்வோர் இரவும் ஆயிரக்கணக்கான தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை விழுங்கி, சுற்றுச்சூழலை சமநிலையில் பராமரிக்கின்றன.
தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு விதைகளைப் பரப்புவதுடன், காடுகளில் உயிர்கள் பரவுவதற்கும் பெரும் பங்காற்றுகின்றன.
இரவில் பறப்பதற்கு இவை கண்களைப் பயன்படுத்துவதில்லை. மாறாக ஒலிகளைப் பயன்படுத்துகின்றன. எதிரொலி இல்லை என்றால் முன்னோக்கிப் பறக்கின்றன. எதிரொலி இருந்தால் அவற்றின் தூரத்தைத் தீர்மானித்து வேறு திசையில் பறக்கின்றன.
இவற்றின் குரல்எதிரொலி அமைப்பில் இருந்துதான் ரேடர் மற்றும் அல்ட்ராசவுண்ட் எனும் அறிவியல் பிறந்தது. அந்த வகையில் விஞ்ஞானிகளின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளுக்கு இவை துணை புரிகின்றன.
ஒருசில வெளவால்களில் மனிதர்களுக்கு நன்மை பயக்கும் மருத்துவ ரகசியங்கள் கூட உள்ளன என்று இன்றைய அறிவியல் உலகம் சொல்கிறது.
வெளவால்கள் குறித்து ஆய்வுகள் தொடர்கின்றன. எதிர்காலத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் வெளிப்படலாம்.
வெளவால்கள் தரும் பாடம்: இந்தப் பிரபஞ்சத்தில் எதுவும் வீணாகப் படைக்கப்பப்டவில்லை. மாறாக அனைத்தும் அல்லாஹ்வின் ஞானத்தில் கட்டுப்பட்டவையே.
சிலபோது மனிதன் அருவருப்பாகக் கருதும் படைப்புகள் கூட அவன் உயிர் வாழ்வதற்குக் காரணமாக அமையலாம்.
அல்லாஹ் கூறுகின்றான்: "ஒவ்வொரு பொருளையும் நுண்ணறிவினால் படைத்து செம்மைப்படுத்திய அல்லாஹ்வின் பேராற்றலின் விந்தை இது!” (27:88)
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
October 24, 2025, 7:31 am
முப்பெரும் பிரச்சினைகளும் முப்பெரும் தீர்வுகளும் - வெள்ளிச் சிந்தனை
October 17, 2025, 7:18 am
குதிரைகள் மீது அல்லாஹ் ஏன் சத்தியம் செய்கின்றான்?: வெள்ளிச் சிந்தனை
September 26, 2025, 9:30 am
இறப்புக்கு மட்டுமா இன்னாலில்லாஹி? - பொருள் என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 12, 2025, 8:32 am
Pillars of Jupiter மூலம் இறைவன் நமக்கு உணர்த்துவது என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 5, 2025, 7:29 am
