நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ரோபோ சங்கர் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

சென்னை: 

நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
நடிகர் கமல்ஹாசன்: ரோபோ சங்கர். ரோபோ புனைப்பெயர் தான். என் அகராதியில் நீ மனிதன். ஆதலால் என் தம்பி. போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய். என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே.
 
நடிகர் சிலம்பரசன்: நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். எப்போதும் சிரிப்பை பரிமாறிய ஒரு மனிதரை இப்படி இழந்துவிடுவது மிகுந்த வேதனை. அவர் மறைவு திரையுலகத்திற்கும், ரசிகர்களின் இதயங்களுக்கும் பெரும் இழப்பு. என்றும் நம்முள் வாழும் அவரின் சிரிப்புகள் நினைவாகவே இருக்கும். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல் அனுதாபங்கள்.

நடிகர் கார்த்தி: காலப்போக்கில் ஏற்படும் அழிவுகரமான தேர்வுகள் ஆரோக்கியத்தை எவ்வாறு சிதைக்கின்றன என்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. ஒரு சிறந்த திறமையாளர் மிக விரைவில் சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
 
நடிகை வரலட்சுமி சரத்குமார்: கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் அவரிடம் பேசினேன். இப்போது அவர் இல்லை. அதுவும் திடீரென்று. என்னால் நம்பவே முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கு பிரார்த்தனைகள். அவர் பலரை சிரிக்க வைத்தவர். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset