நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா பேரிடர்; 10 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது: இறப்பு எண்ணிக்கை 14ஆக உயர்வு

கோத்தா கினபாலு:

சபா பேரிடரில் 10 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, அம்மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கை 14ஆக உயர்வு கண்டுள்ளது.

பாப்பாரின் கம்போங் மரகாங் துண்டுலில் உள்ள ஒரு வீட்டின் இடிபாடுகளில் இருந்து நேற்று இரவு 10 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இது சபாவில் ஏற்பட்ட கொடிய நிலச்சரிவு, வெள்ளத்தில் சமீபத்திய பலியாக அமைகிறது.

அச்சிறுமியின் உடல் இரவு 8.45 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டது என்று சபா தீயணைப்பு, மீட்புத் துறை இயக்குநர் முகமட் பிசார் அஜீஸ் தெரிவித்தார்.

மேலும் அச்சிறுமியின் 34 வயது தாயும் ஆறு வயது சகோதரனும் இடிபாடுகளில் இருந்து இதற்கு முன் மீட்கப்பட்டது.

நேற்று காலை அவர்களது வீடு சேற்றில் புதைந்தபோது மூவரும் சிக்கிக் கொண்டனர்.

இதன் மூலம் கடந்த வாரத்திலிருந்து மாநிலம் தழுவிய இறப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.

முன்னதாக கோத்தா கினபாலுவில் உள்ள கம்போங் செண்டரகாசிஹ் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இடமாகும்.

இதில் இரண்டு முதல் ஒன்பது வயது வரையிலான நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset