நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலயங்களில் தமிழில் குடமுழுக்கு விழா: பேரூராதினம் சாந்தலிங்க அடிகளார் வரவேற்பு

கோலாலம்பூர்:

மலேசியத் திருநாட்டில் பெட்டாலிங் ஜெயா எஸ்.எஸ்.1 அருள் மிகு மாரியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு விழா முழுக்க முழுக்க தமிழில் நடைபெற்றது புதிய வரலாறாகும்.

கோவை பேருர் பேரூராதினம் 25ஆம் பட்டம் குருமகா சந்நிதானம் கோயிலைப் புனிதர் முனைவர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாரும் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தி வைத்தவர்களில் ஒருவர் ஆவார்.

குறுகிய கால பயணம் மேற்கொண்டு  அவர் இன்று மலேசிய வந்துள்ளார்.

இந்த பயணத்தின் தனது அங்கமாக இன்று காலை குயில் ஜெயபக்தி நிறுவனத்திற்கு வருகை புரிந்தார்.

குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் அவர்கள் சாந்தலிங்க மருதாசல அடிகளாரை வரவேற்றார்.

பேரூர் மடம் என்பது தமிழ்நாட்டில், குறிப்பாக கோயம்புத்தூர் அருகே உள்ள பேரூர் பகுதியில் உள்ள ஒரு ஆதீனத்தைக் குறிக்கும். 

இது சிவனுக்கும் சக்திக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு சைவ மடமாகும்.

பேரூர் ஆதீனம் பழமையானதாகக் கருதப்படுகிறது மற்றும் பல ஆண்டுகளாக கோவில்களைப் புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 

பேரூர் மடத்தின் முக்கிய அம்சங்களும் சமய முக்கியத்துவமும் இது சைவ சமயத்துடன் தொடர்புடையது. லிங்காயத்து மரபுகளைப் பின்பற்றுகிறது. 

ஆன்மீகப் பணிகள் என்றால் 
பல பழைய மற்றும் பாழடைந்த கோவில்களைச் சீரமைக்கும் பணிகளை இந்த மடம் செய்து வருகிறது. 

ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் 115 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை பேரூர் மடம் நிர்மாணித்து வருகிறது.

இது தவிர்த்து பல சமூக சேவைகளையும் இந்த மடம் மேற்கொண்டு அனைவருக்கும் உதவிக் கரம் நீட்டி வருகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் 
கருணாநிதி காலம் தொட்டு இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை தமிழக அரசுடன் நல்ல உறவு பேரூர் மடத்திற்கு இருப்பதாக சாந்தலிங்க மருதாசல அடிகளார் தெரிவித்தார்.

தமிழக அரசு மேற்கொண்ட அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தையும் இந்த மடம் மேற்கொண்டு வருகிறது.

மேலும் ஆலயங்களில் தமிழில் குடமுழுக்கு விழாவை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம்.

- பார்த்திபன்நாகராஜன்

கால ஓட்டத்தில் ஆலயங்களில் தமிழில் குடமுழுக்கு விழா அதிக அளவில் நடைபெறும் என்ற  நம்பிக்கை பெரிதும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு பேராக் ஜெயா பாக்கில் நடராஜா பெருமான் ஆலயத்தின் குடமுழுக்கு தமிழில் நடைபெறும் வேளையில் அதில் தாமும் கலந்து கொள்வதாக  அவர் சொன்னார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset