நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெட்ரிகுலேஷன் பிரச்சினையில் மலாயா பல்கலைக்கழக புதிய இளைஞர் சங்கத் தலைவரின் அறிக்கை தொடர்பாக போலிசாருக்கு 4 புகார்கள் கிடைத்தன: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

மெட்ரிகுலேஷன் பிரச்சினையில் மலாயா பல்கலைக்கழக புதிய இளைஞர் சங்கத் தலைவரின் அறிக்கை தொடர்பாக போலிசாருக்கு 4 புகார்கள் கிடைத்தன.

புக்கிட் அமான் குற்ற புலனாய்வுப் பிரிவு இயக்குநர் டத்தோ குமார் இதனை கூறினார்.

மெட்ரிகுலேஷன் திட்டத்தை ஒழிக்கும் திட்டம் குறித்து மலாயா பல்கலைக்கழக புதிய இளைஞர் சங்கத்தின் தலைவர் டாங் யி ஸீ வெளியிட்ட அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மெட்ரிகுலேஷன் திட்டத்தை ஒழிக்க வேண்டும்.

அதற்கு பதிலாக எஸ்டிபிஎம் பொதுப் பல்கலைக்கழகங்களில்  நுழைவதற்கான ஒரே வழியாக மாற்றுமாறு உயர்கல்வி அமைச்சை வலியுறுத்துவதே இந்த அறிக்கையின் நோக்கமாகும்.

இந்த அறிக்கை  தொடர்பாக இதுவரை நான்கு போலிஸ் புகார்களைப் பெற்றுள்ளது.

இந்த அறிக்கை நாட்டின் கல்வி முறை குறித்து எதிர்மறையான கருத்தை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

இது பொதுமக்களின் அதிருப்தியையும் பொதுமக்களின் அச்சத்தையும் தூண்டுகிறது.

இதுவரை இந்த அறிக்கை அதிருப்தி அடைந்த தரப்பினரால் நான்கு போலிஸ் புகார்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505(பி), 1998ஆம் ஆண்டு எம்சிஎம்சி சட்டத்தின் பிரிவு 233 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக டத்தோ குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset