நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

4 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர்:

நான்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை மேலும் அதிகரித்துள்ளது.

சபாவில் காலை 8 மணி நிலவரப்படி, 656 குடும்பங்களைச் சேர்ந்த 2,468 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 19 வெள்ள நிவாரண மையங்களில் இருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு அறிவித்தது.

பேரா மாநிலத்தில் நேற்று இரவு முஅல்லிம் மாவட்டத்தில் 48 குடும்பங்களைச் சேர்ந்த 194 பேராக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 91 குடும்பங்களைச் சேர்ந்த 397 பேராக அதிகரித்துள்ளது.

சிலாங்கூரில் நேற்று இரவு 33 பேர் பாதிக்கப்பட்ட நிலை இருந்தது.

இது  இன்று காலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 குடும்பங்களைச் சேர்ந்த 146 ஆக அதிகரித்துள்ளது.

நெகிரி செம்பிலான் நேற்று 13 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேராக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்தது.

இந்த எண்ணிக்கை , ​​இன்று காலை நிலவரப்படி 20 குடும்பங்களைச் சேர்ந்த 74 பேராக அதிகரித்துள்ளது.

இவர்கள்  போர்ட் டிக்சனில் உள்ள திமா லாமா தேசியப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset