நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கண்டனத் தீர்மானங்களால் ஏவுகணைகளை நிறுத்திவிட முடியாது: கத்தார் மாநாட்டில் பிரதமர் அன்வார் எச்சரிக்கை

தோஹா:

கத்தாரில் நடந்து வரும் உச்சி மாநாட்டில் மலேசியாவின் பிரதமர் அன்வர் இப்ராஹீம் இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் குறித்து முஸ்லிம் நாடுகளுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார் 

கண்டனத் தீர்மானங்களால் ஏவுகணைகளை நிறுத்திவிட முடியாது. வீரஞ் செறிந்த மண்ணையும் விடுவிக்க முடியாது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவர்கள் தொடர்ந்து இழைத்து வருகின்ற கொடுமைகளுக்குக் கடுமையான தண்டனை தரப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்று மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹீம் உலகத் தலைவர்கள் மத்தியில் பேசி இருக்கின்றார். 

தோஹா மீதான இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான வான்வழித் தாக்குதல்களை மலேசியா கடுமையாகக் கண்டிக்கிறது.

இது கத்தாரின் இறையாண்மை, சர்வதேச சட்டம் மேன்மைமிகு ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியின் அமைதி முயற்சிகளின் மீதான அப்பட்டமான தாக்குதல். 

காசாவிலிருந்து மேற்குக் கரை, லெபனான், சிரியா, ஏமன், ஈராக், ஈரான் வரை, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போர் நீடிக்கிறது. இது நிறவெறியின் வடிவமாக மாறியுள்ளது. இது அநீதி மட்டுமல்ல மனிதநேயத்தை முற்றிலுமாக நிராகரிப்பதாகும்.

இது தைரியம், ஒற்றுமை, நடவடிக்கைக்கான நேரம். இராஜதந்திர உறவுகளைத் துண்டிப்பது முதல் வர்த்தகத்தை நிறுத்துவது வரை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

கருணையின் படை காசாவை நோக்கிப் பயணிக்கும்போது, ​​உலகம் அதன் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். கத்தார், பாலஸ்தீனம் நீதி மற்றும் அமைதியை நம்பும் அனைவருடனும் மலேசியா உறுதியாக நிற்கிறது.

இவ்வாறு பிரதமர் அன்வார் கத்தார் மாநாட்டில் உணர்ச்சிப் பொங்க பேசி இருக்கிறார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset