நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாமன்னர் தம்பதியினரின் மலேசியா தின வாழ்த்துகள்

கோலாலம்பூர்:

இன்று கொண்டாடப்படும் மலேசிய தினத்திற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அரசியார் ராஜா ஜரித் சோபியா ஆகியோர் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

சுல்தான் இப்ராஹிம் முகநூலில் பகிரப்பட்ட ஒரு பகிர்வின் மூலம், 

மாட்சிமை தங்கிய மாமன்னரும் அரசியாரும் மலேசியா எப்போதும் அல்லாஹ்வால் நீடித்த அமைதியுடன் ஆசீர்வதிக்கப்பட வேண்டும்.

எந்தவொரு பேரிடரிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தனர்.

பழங்காலத்திலிருந்தே நாட்டின் வலிமையின் தூணாகத் தொடர்ந்து இருந்து வரும் பல இன மக்களிடையே ஒற்றுமை, ஒருமித்த உணர்விற்கும் மாமன்னர்  வாழ்த்துகளை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset