நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா தினம்; முழு தேசபக்தி உணர்வோடு கொண்டாடப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

செப்டம்பர் 16 மலேசியா தினம் முழு தேசபக்தி உணர்வோடு கொண்டாடப்பட வேண்டும்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இதனை வலியுறுத்தினார்.

நாட்டின் நீண்ட பயணத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான மலேசிய தினம் கொண்டாடப்பட வேண்டும்.

மேலும் செப்டம்பர் 16 என்பது நாட்காட்டியில் வெறும் குறிப்பு அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அது தேசியக் கொடியின்  கீழ் ஒன்றுபட்ட தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் கதையை இந்நாள் பிரதிபலிக்கிறது.

இன்று நாம் துணிச்சலில் பிறந்த மலேசியர்களாக, பன்முகத்தன்மையில் வளர்க்கப்பட்டு, கம்பீரமான தேசியக் கொடியில் கீழ் ஒன்றுபட்டுள்ளோம்.

மலேசியாவின் தனித்துவம் நம்மிடம் உள்ள பன்முகத்தன்மையில் தான் உள்ளது.

இன வேறுபாடுகள் ஒரு பிரிவினை அல்ல, மாறாக மலேசியாவை தனித்துவமாகவும் அசாதாரணமாகவும் மாற்றும் ஒரு பலம்.

மலேசியா தினம் ஒருபோதும் கைவிடாத மனப்பான்மையின் பிரதிபலிப்பாகவும், எப்போதும் நம்பிக்கை கொண்ட உறுதியுடனும் இருப்பதாக அவர் மலேசிய தின வாழ்த்து செய்தியில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset