
செய்திகள் மலேசியா
மலேசியாவின் அன்பைப் பரப்பவும், அதன் உணர்வை வலுப்படுத்தவும் இலக்கவியலை ஒரு களமாக மாற்றுங்கள்: ஏரன் அகோ டகாங்
கோலாலம்பூர்:
மலேசியாவின் அன்பைப் பரப்பவும், அதன் உணர்வை வலுப்படுத்தவும் இலக்கவியலை ஒரு களமாக மாற்றுங்கள்.
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் ஏரோன் அகோ டாகாங் இதனை கூறினார்.
அன்பைப் பரப்புவதற்கும், பரஸ்பர மரியாதையின் மதிப்பை நிலைநிறுத்துகின்ற நாகரிக மலேசியாவின் உணர்வை வலுப்படுத்துவதற்கும் இலக்கவியலை ஒரு தளமாக மக்கள் பயன்படுத்த வேண்டும்.
வெறுப்பு, துன்படுத்துதல், அவதூறு போன்ற பல்வேறு புதிய சவால்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
அவை ஒற்றுமையின் அடித்தளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும், இனங்கள், மதங்களுக்கு இடையிலான உறவுகளை சேதப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன.
நன்மைக்குப் பதிலாக தீமையைப் பரப்ப இலக்கவியல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தும் ஒரு சில தரப்பினரின் மனப்பான்மையிலிருந்து இது உருவாகிறது.
எனவே, அனைத்து குடிமக்களும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் புத்திசாலித்தனமாகவும் விவேகமாகவும் இருக்க வேண்டும்.
போலிச் செய்திகளுக்கும் வெறுப்புப் பேச்சைப் பரப்புபவர்களுக்கும் நாம் வழித்தடங்களாக மாறக்கூடாது.
62ஆவது மலேசியா தினத்துடன் இணைந்து வெளியிட்ட செய்தியில் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2025, 8:31 am
மலேசியா தினம்; முழு தேசபக்தி உணர்வோடு கொண்டாடப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 16, 2025, 8:27 am
மாமன்னர் தம்பதியினரின் மலேசியா தின வாழ்த்துகள்
September 16, 2025, 8:02 am
கண்டனத் தீர்மானங்களால் ஏவுகணைகளை நிறுத்திவிட முடியாது: கத்தார் மாநாட்டில் பிரதமர் அன்வார் எச்சரிக்கை
September 15, 2025, 7:12 pm
சபா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது: பிரதமர்
September 15, 2025, 7:11 pm
இந்திய சமுதாயத்தின் நலன் காக்கும் ஒரே கட்சியான மஇகாவை யாராலும் அழிக்க முடியாது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 15, 2025, 7:08 pm
மலேசியர்கள் எனும் உணர்வோடு நீடித்து வாழ்வோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் மலேசிய தின வாழ்த்து
September 15, 2025, 4:37 pm