நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாஸ்டி பாலர் பள்ளிகளில் முதலில் மாண்டரின், தமிழ் மொழியைக் கற்றுக் கொடுங்கள்: ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்

கோலாலம்பூர்:

பாஸ்டி பாலர் பள்ளிகளில் முதலில் மாண்டரின், தமிழ் மொழியைக் கற்றுக் கொடுங்கள்.

கெப்போங் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் இதனை வலியுறுத்தினார்.

கெடாவின் சுங்கை பட்டானியில் நடந்த பாஸ் ஆதரவாளர்கள் பிரிவு மாநாட்டின் தொடக்கத்தில் பேசிய பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம், மொழித் தடைகள் பெரும்பாலும் சமூகங்களுக்கு இடையே சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

ஆனால் ஒருவருக்கொருவர் மொழிகளைக் கற்றுக்கொள்வது சிறந்த புரிதலை வளர்க்கும் என்றார்.

தேசியப் பள்ளிகளில் மொழிகளைக் கற்பிக்கும் திட்டத்தில் கட்சி உண்மையிலேயே உண்மையாக இருந்தால், 

பாஸ்டி பாலர் பள்ளிகளில் மாண்டரின், தமிழ் மொழி வகுப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும்.

மேலும் பாஸ் தலைவர்கள் மேடையில் பேசுவதில் மட்டும் சிறந்தவர்களாக இருக்கக்கூடாது.

கட்சி முன்மொழிந்ததை செயல்படுத்தத் தவறக் கூடாது என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset