நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பல இன பன்முகத்தன்மை, கலாச்சாரமே மலேசியாவின் பலம்: பிரதமர்

கோலாலம்பூர்:

பல இன பன்முகத்தன்மை, கலாச்சாரமே நாட்டின் முக்கிய பலம்.

இது நிராகரிக்கப்பட வேண்டிய அல்லது பயப்பட வேண்டிய ஒன்றல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

2025 மலேசிய கலாச்சார தொடக்க விழாவில் நேற்று இரவு பேசிய அவர்,

தேசிய அடையாளத்தை உருவாக்கும் பல்வேறு இனங்களின் பாரம்பரியத்தை ஏற்றுக்கொண்டு மதிப்பதில்தான் நாட்டின் மகத்துவம் உள்ளது.

நமது நாட்டின் பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்ளும் விருப்பமே நமது மகத்துவத்திற்குக் காரணம்.

மேலும் பல்வேறு பழங்குடியினர், பல்வேறு வட்டாரங்கள், அனைவருக்கும் அவற்றின் சொந்த பலங்கள் உள்ளன.

குறிப்பாக அவை அனைத்தும் அசாதாரண அழகு, கம்பீரத்தை வெளிப்படுத்துகின்றன.

இந்த கலாச்சாரம் மலாய், சீன, இந்திய, இபான், கடசான், முருட், மெலனாவ், பஜாவ் கலாச்சாரங்கள் உள்ளிட்ட பிற பழங்குடியினரின் கலாச்சாரங்களைத் தழுவுவதன் மூலம் வளர்க்கப்படுகிறது.

இவை அனைத்தையும் நாம் பின்னர் மலேசியாவின் குழந்தைகள் என்ற நமது கலாச்சாரமாக ஏற்றுக்கொள்கிறோம் என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset