நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆபாச வீடியோவை பரப்புவதை தடுக்க 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் ரொக்கமாக கோரி சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினருக்கு மிரட்டல்

சுங்கைப்பட்டாணி:

ஆபாச வீடியோவை பரப்புவதை தடுக்க 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் ரொக்கமாக கோரி சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனை சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தௌஃபிக் ஜொஹாரி உறுதிப்படுத்தினார்.

தனது முகத்தை உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான ஆபாச வீடியோவைக் கொண்ட மின்னஞ்சல் மூலம் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

மக்களின் பிரதிநிதியாக தனது நற்பெயரையும் நேர்மையையும் கெடுக்கும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் இந்த வீடியோ தெளிவாக செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 12 அன்று, எனக்குப் பரிச்சயமான ஒரு கணக்கிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. 

அந்த மின்னஞ்சலில் எனது படம் இடம்பெற்ற ஒரு ஆபாச வீடியோ இருந்தது.

ஆனால் அது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்த மின்னஞ்சலில், வீடியோ விநியோகிக்கப்படுவதைத் தடுக்க 100,000 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என்றும் எனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

முன்னதாக முன்னாள் அமைச்சர் ரபிசி ரம்லிக்கும் இதுபோன்ற மிரட்டல் வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset