நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா தினம் வேற்றுமையில் ஒற்றுமைக்கான சின்னமாகும்: இஸ்மாயில் சப்ரி

கோலாலம்பூர்:

மலேசியா தினம் என்பது வேற்றுமையில் ஒற்றுமைக்கான சின்னம், அடையாளமாக உள்ளது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இதனை கூறினார்.

மலேசியா தினம் என்பது தீபகற்ப மலேசியா, சரவா, சபா ஆகிய மூன்று தனித்துவமான பகுதிகள் ஒன்றிணைந்ததை நினைவுகூரும் ஒரு நிகழ்வாகும். 

ஒவ்வொன்றும் அதன் சொந்த கலாச்சார அடையாளம், கண்ணோட்டம், வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளன.

மூன்று பிராந்தியங்களும் பல வழிகளில் வேறுபட்டிருந்தாலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கொண்டாட்டம் ஒற்றுமைக்கான திறவுகோலான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை அனைவருக்கும் நினைவூட்டுகிறது.

மேலும் மலேசியா தினம் என்பது பல்வேறு இனங்கள், கலாச்சாரங்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்ப்பதற்கான ஒரு நாளாகும்.

தனது நிர்வாகத்தின் போது மலேசிய குடும்பம் என்ற சுலோகம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்ற இந்த மதிப்பை இளைய தலைமுறையினருக்குப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset