
செய்திகள் சிந்தனைகள்
Pillars of Jupiter மூலம் இறைவன் நமக்கு உணர்த்துவது என்ன? - வெள்ளிச் சிந்தனை
லெபனான் நாட்டில் பஅலபக் என்ற நகரில் அமைந்திருக்கும் இதற்கு ஜூபிடர் தூண்கள் (Pillars of Jupiter) என்று பெயர்.
இவை ஒவ்வொன்றும் 20 முதல் 23 மீட்டர் உயரம் கொண்டவை என்பது ஆச்சரியமல்ல.
ஒவ்வொரு தூணும் 800 டன் எடையும், 2500 ஆண்டுகளுக்கும் மேலானது என்பதும் ஆச்சரியமல்ல.
ஆச்சரியம் என்னவென்றால், இவை எகிப்தில் கிடைக்கும் சிவப்பு கிரானைட்டிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு, பிரமாண்டமான தூண்களாக செதுக்கப்பட்டு 1000 கிலோமீட்டருக்கும் அப்பால் இருக்கும் லெபனானுக்கு கொண்டு செல்லப்பட்டன.
அந்த காலத்தில் அவை எவ்வாறு ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருக்கும் என்பதுதான் ஆச்சரியம்.
இன்று, அனைத்துவிதமான நவீன தொழில்நுட்ப வசதிகள் இருந்த போதிலும் நூற்றுக்கணக்கான டன் எடைகொண்ட கற்களை ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு நகர்த்துவதே பெரும் சிரமம்.
அப்படியானால் அந்த நேரத்தில் அவர்களுக்கு எந்த மாதிரியான கருவிகள் உதவியிருக்கும்? ஸுப்ஹானல்லாஹ்…!
நம்மைவிட பன்மடங்கு வலிமையுடனும் வளமாகவும் வாழ்ந்த அந்த மக்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்டனர்.
அவர்கள் வாழ்வில் இருந்து பாடம் பெறுவதற்காக அந்த சுவடுகளை மட்டும் நமக்காக அல்லாஹ் விட்டுவைத்திருக்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான்:
"மேலும், இவர்கள் எப்பொழுதேனும் பூமியில் சுற்றித்திரிந்து தங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்த்ததில்லையா? அவர்கள் இவர்களைவிட அதிக வலிமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள்; பூமியை நன்கு பண்படுத்தினார்கள்; மேலும், இவர்களைக் காட்டிலும் அதிகமாக அவர்கள் அதில் வளமான வாழ்க்கையை நிர்மாணித்தார்கள். அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். பிறகு, அல்லாஹ் அவர்களுக்கு அக்கிரமம் புரிபவனாக இருந்ததில்லை. ஆனால், தமக்குத் தாமே அவர்கள் அக்கிரமம் புரிந்துகொண்டிருந்தார்கள்”.
(30:9)
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
September 5, 2025, 7:29 am
நபி (ஸல்) அவர்கள் கூறிய இரண்டு கற்களின் உதாரணம் - வெள்ளிச் சிந்தனை
August 26, 2025, 6:20 pm
அன்னை தெரசா பல்கலைக் கழகமும் எம் ஜி ஆரும்
August 15, 2025, 8:57 am
உண்மையான அடியார்கள் யார் எனில்..! - வெள்ளிச் சிந்தனை
August 8, 2025, 8:18 am
நண்பர்களை எதிரிகளாக்கும் அபார ஆற்றல் பெற்றது புறம் - வெள்ளிச் சிந்தனை
August 6, 2025, 11:13 pm
ஐயா.செ.சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்டம்
July 25, 2025, 9:32 am