செய்திகள் கலைகள்
மம்மூட்டி பிறந்தநாளுக்கு மோகன்லால் கொடுத்த சர்ப்ரைஸ்: வைரலாகும் படம்
திருவனந்தபுரம்:
கடந்த சில மாதங்களாக மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு உடல் நலமில்லை என்றச் செய்திகள் வெளியானது.
அதனால் அவர் நடித்து வந்த படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் தவிர்த்து, நீண்டகாலமாக ஓய்வில் இருந்தார்.
தற்போது அவர் உடல்நலப் பிரச்னையிலிருந்து மீண்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
நடிகர் மம்மூட்டி நலமுடன் வீடு திரும்பியதற்கு கேரள அரசியல் தலைவர்கள், மலையாளத் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர்.
அந்தவகையில் நடிகர் மோகன்லாலும் தனது சமூகவலைதளப் பக்கத்தில், ஒரே மேடையில் நடிகர் மம்மூட்டிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்திருந்தார்.
இந்நிலையில் மம்மூட்டியின் 74-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் செப் 7-ஆம் தேதி பிக்பாஸ் மலையாளம் சீசன் 7-ன் நிகழ்ச்சிக்கு மம்மூட்டி முகங்கள் அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து சென்றிருக்கிறார் மோகன்லால்.
இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
போட்டியாளராகக் கருதப்படும் நடிகரை மற்றொரு பிரபல நடிகர் இப்படிப் ஆதரிக்கும் சூழல் இந்தியாவில் வேறு எந்த நடிகரிடமும் பார்க்க முடியுமா? என்று நெட்டிசன்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் மம்மூட்டியும் நடிகர் மோகன்லாலும் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் இவர்களின் நட்பு பலராலும் பாராட்டப்படும் ஒன்றாகவே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 6, 2026, 4:25 pm
பிரபல இயக்குநரின் மனைவியின் படப்பிடிப்பைத் துவங்கி வைத்த நடிகர் சூர்யா
April 3, 2026, 5:39 pm
அல்லு அர்ஜுனின் 25 வது படத்தை பசில் ஜோசப் இயக்குகிறார்
March 26, 2026, 6:40 pm
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ மீண்டும் தள்ளிப் போகிறது
March 25, 2026, 6:30 pm
தென்கிழக்காசியாவின் மர்மமான 'பில்லி சூனியம்': வெள்ளித்திரையில் விரிந்த 'காங் தாவ்' மந்திர உலகம்
March 22, 2026, 6:30 pm
கலைஞர்களின் சேவையைப் போற்றும் மலேசியா: பி. ரம்லியின் 97-வது பிறந்தநாளில் சிறப்பு அங்கீகாரம்
March 22, 2026, 6:16 pm
மூன்றே நாட்களில் 500 கோடி வசூல் செய்த 'துரந்தர் 2' திரைப்படத்தின் சாதனை
March 20, 2026, 11:33 pm
"வலிமையின் அடையாளம் மறைந்தது": ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சக் நோரிஸ் காலமானார்
March 20, 2026, 4:19 pm
