செய்திகள் கலைகள்
சின்னத்திரை நடிகர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா
சென்னை:
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் (2025-2028) அறிமுக விழா சென்னை மதுரவாயிலில் உள்ள பாக்கியலட்சுமி கல்யாண மண்டபத்தில் (செப்டம்பர் 7) நடைபெற்றது.
கலையுலக முன்னணியினர், பல்துறை பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரத்,செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நவிந்தர், பொருளாளரக தேர்ந்தெடுக்கப்பட்ட கற்பகவல்லி, இதர நிர்வாகிகளான வசந்த், சிவக்கவிதா, ஆதித்யா, தேவானந்த், பிரேமி, ஈஸ்வர் ரகுநாதன், ரஞ்சன், உள்ளிட்டோர் அறிமுகப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

வெற்றி பெற்றவர்கள் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்களையும், துணை முதலமைச்சர் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களையும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களையும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியன் அவர்களையும் சமீபத்தில் சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில் இன்றைய நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக
பூச்சி முருகன், தலைவர், குடிசை மாற்று வாரியம் மற்றும் துணைத் தலைவர், நடிகர் சங்கம்; பிரபாகர ராஜா, சட்டமன்ற உறுப்பினர், விருகம்பாக்கம்; டத்தோ. நடிகர் ராதாரவி தலைவர், தென்னிந்திய சின்னத்திரை, திரைப்பட டப்பிங் கலைஞர்கள் சங்கம்; இயக்குநர் பேரரசு, செயலாளர், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம்; காரம்பாக்கம் கணபதி, மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர்; R.K. செல்வமணி தலைவர், FEFSI; நடிகர் S.Ve. சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்; மங்கை அரிராஜன் சின்னத்திரை கூட்டமைப்பு தலைவர்; டாக்டர். ஜாக்குவார் தங்கம் தலைவர், கில்டு தயாரிப்பாளர் சங்கம்; திருமதி. சுஜாதா விஜயகுமார் , தலைவர், தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம்; M.E.சேகர் MC அவர்கள்,
சென்னை பெருநகர மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு உறுப்பினர்; லியாகத் அலிகான் அவர்கள், செயளாலர், தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்; உதயசங்கர் அவர்கள், தலைவர், தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம்; திருமதி. ரத்னா லோகேஸ்வரன் MC, சென்னை பெருநகர மாநகராட்சி கல்விக் குழு உறுப்பினர் கலந்து கொண்டனர்.
- நிகில் முருகன்
தொடர்புடைய செய்திகள்
April 6, 2026, 4:25 pm
பிரபல இயக்குநரின் மனைவியின் படப்பிடிப்பைத் துவங்கி வைத்த நடிகர் சூர்யா
April 3, 2026, 5:39 pm
அல்லு அர்ஜுனின் 25 வது படத்தை பசில் ஜோசப் இயக்குகிறார்
March 26, 2026, 6:40 pm
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ மீண்டும் தள்ளிப் போகிறது
March 25, 2026, 6:30 pm
தென்கிழக்காசியாவின் மர்மமான 'பில்லி சூனியம்': வெள்ளித்திரையில் விரிந்த 'காங் தாவ்' மந்திர உலகம்
March 22, 2026, 6:30 pm
கலைஞர்களின் சேவையைப் போற்றும் மலேசியா: பி. ரம்லியின் 97-வது பிறந்தநாளில் சிறப்பு அங்கீகாரம்
March 22, 2026, 6:16 pm
மூன்றே நாட்களில் 500 கோடி வசூல் செய்த 'துரந்தர் 2' திரைப்படத்தின் சாதனை
March 20, 2026, 11:33 pm
"வலிமையின் அடையாளம் மறைந்தது": ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சக் நோரிஸ் காலமானார்
March 20, 2026, 4:19 pm
