நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்துவுக்குள் ஒரு அழிவுகரமான கலாச்சாரத்தைக் கொண்டு வர வேண்டாம்: ஹம்சா

ஷாஆலம்:

பெர்சத்து கட்சிக்குள் ஒரு அழிவுகரமான கலாச்சாரத்தை யாரும் கொண்டு வர வேண்டாம்.

பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் இதனை கூறினார்.

பெர்சத்து என்பது தூண்டுதல், துண்டுப்பிரசுரங்கள் போன்ற அழிவுகரமான கலாச்சாரத்திலிருந்து விடுபட்ட ஒரு கட்சியாக இருக்க வேண்டும்.

ஒரு பெரிய குடும்பமாகக் கருதப்படும் அமைப்பில் இந்த மோசமான கூறுகள் அனைத்தும் பரவாமல் தடுக்கப்பட வேண்டும்.

அனைவருக்கும் முன்னால் என்ன சவால்கள் இருந்தாலும், அவற்றை நாம் ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும். 

ஒன்றுபட்டாலும் நாம் நிற்கிறோம், பிளவுபட்டாலும் நாம் வீழ்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஷாஆலமில் நடந்த கட்சிப் பிரிவின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பேசிய டத்தோஸ்ரீ ஹம்சா இவ்வாறு கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset