நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

கவிஞர் மு. மேத்தாவும் இசைஞானி இளையராஜாவும்

வேலைக்காரன் படத்தில மு.மேத்தா அனைத்து பாடல்களையும் எழுதினார். படத்தில 6 பாடல்கள் இருந்தாலும் “வா வா வா கண்ணா வா” பாடல் மட்டும் தான் ஜோடிப்பாடலா இருக்கும். பாடலில் 3 சரணம் இருக்கும். காதலர்களின் உணர்வுகளை கற்பனைக்கு எட்டாத காதல் வரிகளுடனும் கூட கொஞ்சம் சமூக மத நல்லிணக்கைத்தையும் சேர்த்து இந்த பாடலில் கொடுத்திருப்பார் கவிஞர் மு.மேத்தா.

பல்லவியில் காதலியின் தனித்துவத்தை கற்பனைக்கு எட்டாத காதல் ரசமாக இப்படி சொல்லி இருப்பார். சிறு கதையாக இருந்து இனிமை சேர்ப்பவளானவள் தனிமையான சூழலில் தொடர்கதையாய் நீண்டு செல்வாள் என.... 

உனக்கொரு சிறு கதை நான் இனிமையில்
தொட தொட தொடர்கதை தான் தனிமையில்…

இந்த பாடலின் மூன்றாவது சரணத்தில் காதலி “ஷாஜகானை பார்த்த தில்லை நானும் உன்னை
பார்க்கிறேன்…” இப்படி பாடி முடித்தவுடன் காதலன் பாடும் வரிகள் என்பது மத நல்லிணக்கத்தின் பறைசாற்றலாக துணிவுடன் எடுத்துரைக்கப்பட்ட உவமையாக்கி இருப்பார் கவிஞர்.

தாஜ்மஹாலின் காதிலே
ராம காதை கூறலாம் 
மாறும் இந்த பூமியில் 
மதங்கள் ஒன்று சேரலாம்…

ஈழத் தமிழர்களின் வாழ்வியல் போராட்டத்தை மையமாக் கொண்ட “போர்க்களத்தில் ஒரு பூ” படத்தில் “விடிவா இது முடிவா” என்ற பாடலில் அவர்களின் உணர்வுகளை வார்த்தைகளில் வலிகளாக சொல்லி இருப்பார். 

போகிற திசை எது புரியவில்லை 
போக்கினில் நோக்கங்கள் எதுவுமில்லை 
விழுவதும் எழுவதும் வாழ்க்கை என்றானது 
இதயத்தின் ஆழத்தில் தளும்புகள் ஆனது...  

“என் மன வானில் சிறகை விரிக்கும்” கதைக்காக எழுதிய இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் தனக்காகவே எழுதியதாக இசைஞானி ஒரு நிகழ்வில் கூறி இருப்பார். இசையை ரசிக்கும் ரசிகர் கூட்டம் என் இசையை பார்ப்பார்கள்... அந்த இசையால் மட்டுமே நான் அவர்களை அரவணைப்பேன். தலைமுறை தாண்டி என்றும் எல்லோராலும் கொண்டாடி தீர்க்கும் இசையின் ராகம் இது தானே என இசைஞானி சொல்வதை போல இந்த வரிகள் அமைந்திருக்கும்.

மனமுள்ளோர் என்னை பார்ப்பார்
மனதினால் அவரை பார்ப்பேன்
மறந்திடா ராகம் இது தானே..

பொருளுக்காய் பாட்டை சொன்னால்
பொருளற்ற பாட்டே ஆகும்
பாடினேன் அதை நாளும் நாளும்
பொருளில்லா பாட்டானாலும்
பொருளையே போட்டு செல்வார்
போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்…

கவிஞர் பேராசிரியர் என்பதை தாண்டி சமூக உணர்வுகளை பறைசாற்றிய அற்புத மத நல்லிணக்க சிந்தனையாளர் என்பது கூடுதல் சிறப்பு. காலம் கண்டெடுத்த காவிய கவிஞர் திரு. மு மேத்தா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

- சுமதி சேகர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset