நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலிசார் கைது செய்தனர்

பெஸ்தாரி ஜெயா:

ஆலயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலிசார் கைது செய்தனர்.

கோலா சிலாங்கூர் போலிஸ் தலைவர் அசாஹருதீன் தாஜுடின் இதனை தெரிவித்தார்.

நேற்று பெஸ்டாரி ஜெயாவின் லாடாங் புக்கிட் படோங்கில் உள்ள ஒரு ஆலயத்தில் வருடாந்திர திருவிழாவின் நடைபெற்றது.

அப்போது    வானத்தை நோக்கி பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக ஒருவரை போலிசார் கைது செய்தனர்.

நேற்று பிற்பகல் 3.50 மணிக்கு இந்த சம்பவத்தைக் காட்டும் வைரலான வீடியோ தொடர்பாக போலிஸ் துறைக்கு புகார் கிடைத்தது.

நேற்று காலை 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சிலாங்கூர் போலிஸ்படையில் குற்றப்பிரிவு, கோல சிலாங்கூர் போலிஸ்படையின் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணைக்கு உதவுவதற்காக, இரவு 8 மணியளவில் பெட்டாலிங் ஜெயாவில் சந்தேக நபரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு 1960 ஆயுதச் சட்டத்தின் பிரிவு 39 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

சந்தேக நபர் இன்று முதல் செப்டம்பர் 4 வரை மூன்று நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset